குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குடவாசல் ரவுடி சீட்டிங் பாபுவிடம் 3 கார்களை பறிகொடுத்த சென்னையைச் சேர்ந்த ஜனார்த்தனன்!-பலமுறை எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும், வழக்கு பதிவு செய்யாமல் அலைகழிக்கும் குடவாசல் காவல் ஆய்வாளர்!

குடவாசல் ரவுடி சீட்டிங் பாபுவிடம் பறிகொடுத்த கார்கள்.

குடவாசல் ரவுடி சீட்டிங் ஆர்.எஸ். பாபு.

இன்று (06.01.2022) குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குடவாசல் ரவுடி சீட்டிங் ஆர்.எஸ். பாபுவிடம், சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர்,. தனது கார் ஒன்றையும் மற்றும் தனது நண்பர்களின் கார் இரண்டையும் சேர்த்து 3 கார்களை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

மேற்படி மூன்று கார்களுக்கும் ஒரு மாதம் மட்டுமே குடவாசல் சீட்டிங் ஆர்.எஸ். பாபு வாடகை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவரிடமிருந்து வாடகை வராததால், சென்னையிலிருந்து புறப்பட்டு குடவாசலுக்கு வந்த ஜனார்த்தனன், ரவுடி சீட்டிங் ஆர்.எஸ். பாபுவிடம் 3 கார்களையும் திருப்பி கேட்டுள்ளார்.

கார்களை திருப்பி கொடுக்காமல் ஜனார்த்தனுக்கு சீட்டிங் பாபு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஜனார்த்தனன் குடவாசல் காவல் நிலையத்தில் அப்போது ஆய்வாளராக இருந்த ரேகா ராணி என்பவரிடம் உரிய ஆதாரத்தோடு எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளார். ஆனால், குடவாசல் போலீசார் சீட்டிங் பாபு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், 16.11.2021 அன்று திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஜனார்த்தனன் எழுத்துபூர்வமாக புகார் அளித்துள்ளார். மனு அளித்தற்கான ஒப்புதல் சீட்டு, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு தற்போது குடவாசல் காவல் நிலைய ஆய்வாளராக இருக்கும் கருணாநிதியிடம் ஜனார்த்தனன் மீண்டும் எழுத்துபூர்வமான புகார் அளித்துள்ளார். பலமுறை நேரிலும், தனது வழக்கறிஞர் மூலமாகவும் குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதியிடம், ஜனார்த்தனன் முறையிட்டும்; இன்று வரை அதற்கான மனு ரசீது கூட குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதி வழங்கவில்லை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஜனார்த்தனன் எழுத்துபூர்வமாக கொடுத்த புகார் மீதும் குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன் பிறகு நன்னிலம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் இளங்கோவனை நேரில் சந்தித்து; குடவாசல் ரவுடி சீட்டிங் பாபுவிடம் இருந்து மேற்படி 3 கார்களையும் மீட்டு தரும்படி ஜனார்த்தனன் முறையிட்டுள்ளார். அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜனார்த்தனன் இன்று (06.01.2022) மீண்டும் எழுத்துபூர்வமான புகார் அளித்துள்ளார்.

இதோ அதற்கான ஒப்புதல் சீட்டு:

இந்நிலையில், இன்று (06.01.2022) மாலை குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதியை அவரது அலைபேசியில் தொடர்புக் கொண்ட ஜனார்த்தனன், தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுத்து மேற்படி 3 கார்களையும் மீட்டு தரும்படி ஜனார்த்தனன் முறையிட்டுள்ளார்.

‘நான் என்னானு பார்த்துட்டு கூப்புறேன்’ என்று சொன்ன குடவாசல் காவல் நிலைய ஆய்வாளர் கருணாநிதி; அதன் பிறகு அவரிடருந்து எந்த பதிலும் வராததால் விரக்தியடைந்த ஜனார்த்தனன் தற்கொலை செய்துகொள்ள போவதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

குடவாசல் ஆர்.எஸ். பாபுவிடம் 3 கார்களை பறிகொடுத்த நிலையில், கார்களுக்கான மாதாந்திர கடன் தொகையை செலுத்த முடியாமல், நண்பர்களின் கார்களுக்கும் பதில் சொல்ல முடியாமலும் ஜனார்த்தனன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.

மேற்படி மூன்று கார்களுக்கான அசல் ஆவணங்கள் அனைத்தும் ஜனார்த்தனன் வசம் உள்ள நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல கட்டபஞ்சாயத்துகாரர் ஒருவர் மூலம், மேற்படி மூன்று கார்களையும் குடவாசல் சீட்டிங் ஆர்.எஸ்.பாபு சில லட்சங்களை பெற்றுக்கொண்டு அடமானம் வைத்துள்ளதாக ஜனார்த்தனன் கூறுகிறார். இரண்டரை லட்சம் தந்தால் ஒரு காரை மீட்டு ஒப்படைப்பதாகவும் கும்பகோணத்தைச் சேர்ந்த அந்த பிரபல கட்டபஞ்சாயத்துகாரர் ஜனார்த்தனிடம் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த விபரங்கள் அனைத்தும் குடவாசல் காவல் நிலைய போலிசாருக்கு தெரிந்தும் இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

குடவாசல் சீட்டிங் ஆர்.எஸ்.பாபு இதுப்போன்று நூற்றுக்கணக்கான நபர்களை ஏமாற்றியுள்ளான். அவன் மீது ஏராளமான புகார்களும், வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

சட்டம் – ஒழுங்கை காப்பாற்றவும்; குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகவும், மாநிலம் முழுவதும் உள்ள ரவுடிகளையும்; குற்றப்பின்னனி கொண்ட நபர்களையும்; கட்டபஞ்சாயத்துக்காரர்களையும் உன்னிப்பாக கண்காணித்து கைது செய்யும்படி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு; காவல்துறை அதிகாரிகளுக்கு பிறப்பித்த கண்டிப்பான உத்தரவின் அடிப்படையில்தான் குடவாசல் ரவுடி சீட்டிங் பாபு மீது வேறுவழியில்லாமல் குண்டர் சட்டம் தற்போது பாய்ந்துள்ளது.

எனவே, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள குடவாசல் சீட்டிங் ஆர்.எஸ்.பாபுவை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல மர்மங்கள் வெட்ட வெளிச்சமாகும், மேலும், அவனது அலைபேசி பதிவுகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றினால் அவனது தொடர்பில் இருந்த நபர்கள் அனைவரையும் கண்டு பிடித்துவிடலாம்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply