Lt Gen Manoj Pande, PVSM, AVSM, VSM took over as the Vice Chief of the Army Staff on 01 February 2022.
An alumnus of National Defence Academy, Lt Gen Manoj Pande was commissioned in December 1982 to the Corps of Engineers (The Bombay Sappers). The General Officer commanded an Engineer Regiment during Operation Parakram in the sensitive Pallanwala Sector along the Line of Control of Jammu and Kashmir. He is a graduate of Staff College, Camberley (United Kingdom) andattended the Higher Command (HC) and National Defence College (NDC) Courses.
In his 39 years of distinguished military career, he has tenanted important and challenging command and staff appointments in different operational environments which include command of an Engineer Brigade of Strike Corps in the Western Theatre, Infantry Brigade along Line of Control in Jammu and Kashmir, Mountain Division in the High Altitude Area of Western Ladakh, a Corps in the North East, Commander-in-Chief Andaman & Nicobar Command (CINCAN) and General Officer Commanding-in-Chief of Eastern Command.
His staff exposures include Brigade Major of a Mountain Brigade in the North East, Assistant Military Secretary (AMS) in Military Secretary’s Branch, Colonel Q of a Mountain Division in High Altitude Area and Brigade General Staff (Operations) at Headquarters Eastern Command. The General Officer also served as Chief Engineer in the United Nations Mission in Ethiopia and Eritrea. He tenanted the appointments of Additional Director General (ADGMO-B) in the Military Operations Directorate at Army Headquarters, Chief of Staff at Headquarters Southern Command and Director General Discipline Ceremonial & Welfare at the Army Headquarters.
For his illustrious service he has been conferred with the award of Param Vishisht Seva Medal, Ati Vishisht Seva Medal, Vishisht Seva Medal, the Chief of Army Staff Commendation and GOC-in-C Commendation twice.
Lt Gen Manoj Pande takes over the appointment of the Vice Chief of the Army Staff from Lt Gen CP Mohanty who superannuated on 31 January 2022 after completing four decades of illustrious career in the Army.
xxxxxxxxxxxxx
லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், விஎஸ்எம் 01 பிப்ரவரி 2022 அன்று இராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்..
தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான , லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே டிசம்பர் 1982 ஆம் ஆண்டில் பொறியாளர் பிரிவில் – கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் (தி பாம்பே சாப்பர்ஸ்) ல் பணியில் நியமிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பல்லன்வாலா செக்டார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பராக்ரம் நடவடிக்கையின் போது ஜெனரல் ஆஃபீசர் பொது அதிகாரியாக பொறியாளர் படைப்பிரிவொன்றுக்கு தலைமை தாங்கினார். அவர் கேம்பர்லி (இங்கிலாந்து ) ஊழியர் பயிற்சி கல்லூரியில் பட்டம் பெற்றவர், ஹையர் கமாண்ட் உயர் தலைமை மற்றும் தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) படிப்புகளையும் பயின்றவர்.
அவரது 39 ஆண்டுகால சிறப்புமிக்க இராணுவ வாழ்க்கையில் மேற்குப் பகுதி தாக்குதல் படையின் பொறியாளர் பிரிவின் தலைமைப் பொறுப்பு, ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் காலாட்படை பிரிவு, மேற்கு லடாக்கின் மிக உயரமான பகுதியில் உள்ள மலைப்படைப் பிரிவு, வடகிழக்கில் இராணுவ வீரர், அந்தமான் & நிக்கோபார் இராணுவத் தளபதி (CINCAN) மற்றும் கிழக்குப் படைப்பிரிவின் தலைமை தளபதி ஜெனரல் ஆஃபீசர் கமாண்டிங்க் இன் சீஃப் ஆகியவை உட்பட பல்வேறு சூழல்களில் முக்கியமான, சவாலான தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியவர்.
வடகிழக்கில் ஒரு மலைப் படையணியின் பிரிகேட் மேஜர், இராணுவச் செயலாளரின் கிளையில் உதவி இராணுவச் செயலர் (ஏ எம் எஸ்), உயரமான பகுதியில் உள்ள மலைப் பிரிவின் கர்னல் கியூ, தலைமையகத்தில் கிழக்கு படைப்பிரிவின் பிரிகேட் பொது ஊழியர்கள் (ஜெனரல் ஸ்டாஃப்) (செயல்பாடுகள்) ஆகிய பணிகளையும் அவர் ஆற்றியுள்ளார்.
எத்தியோப்பியா மற்றும் எரித்திரியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை இயக்ககத்தின் தலைமைப் பொறியாளராகவும் பணியாற்றினார இவர். இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவ நடவடிக்கை இயக்குனரகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரல் (ஏடிஜிஎம் ஓபி) ; தலைமையகத்தின் தெற்கு படைப்பிரிவின் தலைவர்; இராணுவ தலைமையகத்தில் (ஒழுங்கு சடங்கு மற்றும் நல்வாழ்வு) தலைமை இயக்குநர் பதவிகளையும் அவர் வகித்தவர்.
அவரது சிறப்பு மிக்க சேவைக்காக, அவருக்கு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கம், இராணுவத் தலைமைத் தளபதி பாராட்டு மற்றும் ஜெனரல் ஆஃபீசர் கமாண்டிங்க் இன் சீஃப் பாராட்டு (இரண்டு முறை) ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொஹந்தியிடம் இருந்து இராணுவத் துணைத் தளபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொஹந்தி இராணுவத்தில் நாற்பதாண்டு காலம்சிறப்புறப் பணியாற்றி 31 ஜனவரி 2022 அன்று ஓய்வு பெற்றார்.
–எம்.பிரபாகரன்