அனிதா ராதாகிருஷ்ணனின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து!

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

SodaPDF-watermarked-Enforcement-Directorate

தமிழ்நாடு மீன்வளத்துறை, மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், முன்னாள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது 14.05.2001 முதல் 31.3.2006 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீசார், 2006-ல், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட, ஏழு பேர் மீது (குற்ற எண்: 04/2006) வழக்குப் பதிவு செய்தனர்.

அதன் அடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்தனர். அப்போது, அனிதா ராதாகிருஷ்ணன், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இந்த பண பரிமாற்றம் வாயிலாக, தன் பெயரிலும், தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் 160 ஏக்கர் நிலம் உட்பட, 18 வகையான அசையா சொத்துக்கள் வாங்கியிருப்பதை, அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், 160 ஏக்கர் நிலத்துக்கு ‘சீல்’ வைத்த அமலாக்கத் துறையினர், 6.50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தற்போது முடக்கியுள்ளனர்.

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீது இது தவிர, இன்னும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றின் விவரங்கள் அனைத்தையும் 2021 சட்டமன்ற தேர்தல் உறுதிமொழி பத்திரத்தில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அவற்றின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

Affidavit-1643884248

இத்தனை வழக்குகளில் அவர் சிக்கி இருந்தாலும் ஆனால், இதுவரை அவர் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை.

இந்நிலையில். அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீது மத்திய அமலாக்கத்துறை தற்போது எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.இஅதிமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்த அமைச்சர்களுக்கு அரசியல் ஆதாயத்திற்காக, திமுகவில் அடைக்கலம் கொடுத்ததோடு மட்டும் இல்லாமல், அமைச்சர் பதவியையும் வழங்கியது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நேர்மையை தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது.

தலை அரிக்கிறது என்பதற்காக கொள்ளிக்கட்டையைை எடுத்து சொறிந்து கொண்ட கதையாக” இது மாறியுள்ளது.

கட்சி நிர்வாகத்தில் ஆயிரம் சமரசங்கள் செய்துகொண்டாலும்; அவற்றின் தலையீடு, தாக்கம் ஆட்சி நிர்வாகத்தில் குறிக்கீடாமல் மிகவும் கவனமாகப் பார்த்துகொள்ளவேண்டும். ஊழலற்ற, நேர்மையான, தூய்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தை வழங்க 100 சதவீதம் முயற்சிக்க வேண்டும். அதற்கு தடையாக இருப்பது எதுவாக இருந்தாலும்; தயவு தாட்சணியம் பார்க்காமல் உடனே தூக்கியெறிய வேண்டும்.

ஆட்சிப் பொறுப்பில் எத்தனை ஆண்டுகள் இருந்தோம் என்பது முக்கிமல்ல!-இருந்த காலக்கட்டத்தில் என்ன செய்தோம் என்பதை வருங்கால தலைமுறை அதை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும்.

இதுவரை எப்படியோ?! இனி வரும் காலங்களிலாவது குற்றவழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கும்; குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கும் தேர்தலில் போடடியிட வாய்ப்பு வழங்கப்படக்கூடாது என்பதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உறுதியாக இருக்கவேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு உண்மையான விடிவு காலம் பிறக்கும். மக்களின் வாழ்வும் சிறக்கும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2021/10/20/62789/

Leave a Reply