உள்ளாட்சித்தகவல் (UTL MEDIA) செய்தி எதிரொலி!- அனைத்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்களின் அழைபேசி எண்களை வெளியிட்ட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.

Dr. V.பழனி குமார்., தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வட்டார தேர்தல் பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்தையும் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகளை, தேர்தல் பார்வையாளர்களாக நியமித்து அவர்களின் பெயர்களை பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்டு இருந்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அவர்களின் அலைபேசி எண்களை மட்டும் வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில், இது குறித்து நமது உள்ளாட்சித்தகவல் (UTL MEDIA) ஊடகத்தில் ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!-வட்டார தேர்தல் பார்வையாளர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண்கள்!-முழு விவரம்!-சிறப்பு தேர்தல் பார்வையாளர்களின் அலைபேசி எண்களை மட்டும் வெளியிடாதது ஏன்?!’- என்ற தலைப்பில் இன்று (February 5, 2022) மதியம் 2:14 pm மணிக்கு செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதையடுத்து அனைத்து மாவட்ட தேர்தல் பார்வையாளர்களின் அழைபேசி எண்களை இன்று (February 5, 2022) மாலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டடுள்ளது.

அதை நமது வாசகர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

PR-0027-2022-1

முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2022/02/05/67813/

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply