ஆந்திரப்பிரதேசத்தின் திருப்பதியில் பகவான் வெங்கடேஸ்வராவை வழிபடுவதற்காக குடியரசு துணைத் தலைவர் .எம்.வெங்கையா நாயுடு தமது குடும்பத்தினருடன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சென்றிருந்தார்.
வழிபாட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு.நாயுடு, இந்தக் கோயிலுக்கு தமது பயணம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும், நாட்டு மக்களின் அமைதிக்கும், வளத்திற்கும் பிரார்த்தித்ததாகவும் கூறினார். ஆன்மீகம் என்பது சேவை உணர்வைத் தவிர வேறொன்றும் இல்லை என்று கூறிய அவர், மக்களுக்கு சேவை செய்வதை விடவும் அதிகமாக பகவான் வெங்கடேஸ்வரரை தரிசிப்பது ஊக்கமுடையதாக இருக்கிறது என்றார்.
ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகிய அனைவருக்குமான மாண்புகளை இந்தியக் கலாச்சாரமும், பாரம்பரியமும் கொண்டுள்ளன என்று குறிப்பிட்ட .நாயுடு, அவற்றைப் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றார். பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ள கோயில் நிர்வாகத்தை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.
–திவாஹர்