இறுதி கட்டத்தை எட்டியுள்ள கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு!-10 ஆண்டுகளாக நடக்கும் சட்டப் போராட்டம்.

கே.என்.ராமஜெயம்.

தற்போது தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வருபவர் கே.என்.நேரு; இவரது தம்பிதான் கே.என்.ராமஜெயம். தொழிலதிபரான கே.என்.ராமஜெயம், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கே.என்.நேரு அமைச்சராக இருந்தபோது திருச்சியில் கொடிக்கட்டி பறந்தார். கே.என்.ராமஜெயத்தை அவருடைய ஆதரவாளர்கள் அனைவரும் MD என்றே அடைமொழி வைத்து செல்லமாக அழைத்து வந்தனர். கே.என்.ராமஜெயம் MBA -முதுநிலை வணிக நிர்வாகம் படித்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத் தேர்தல் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காவது முறையாக செல்வி ஜெயலலிதா முதலமைச்சரானார்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாறியதும் காட்சிகள் மாறத் தொடங்கின. நில அபகரிப்பு உள்பட பல வழக்குகளில் கே.என்.நேரு, கே.என்.ராமஜெயம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 29.03.2012-ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்ற தனது கணவர் கே.என்.ராமஜெயத்தை காணவில்லை என்றும் அவரை சமூக விரோதிகள் கடத்தி சென்று விட்டார்கள் என்றும், திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் அவரது மனைவி லதா ராமஜெயம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருச்சி தில்லை நகர் காவல்நிலைய போலிசார் (Crime No: 128/2012, Date : 29.03.2012, Time: 11.45 a.m- IPC- Section : 365) ஆட்கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில்தான், கடந்த 29.03.2012-ம் தேதி திருச்சி-கல்லணை சாலையில் “பொன்னி டெல்டா” அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு எதிரில் ( அப்போது அந்த கட்டடப்பணி நடந்துக்கொண்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) காவிரி ஆற்று கரையோரம் உள்ள முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கே.என்.ராமஜெயம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

கொலை செய்யப்பட்டு கிடந்த கே.என்.ராமஜெயத்தின் உடலை; அப்பகுதியில் வேலை செய்த கட்டட தொழிலாளிகள் தான் முதலில் பார்த்துள்ளனர். அதன் பின்னர் திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் K.பாலசுப்ரமணியன் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலிசார், கே.என்.ராமஜெயத்தின் உடலை கைப்பற்றி, உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்ந்தமாக ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலிசார் (Crime No: 228/2012, Date : 29.03.2012, Time: 11.00 a.m- IPC- Section : 302) கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கை திருச்சி மாநகர போலீஸார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இவ்வழக்கு 29.06.2012 அன்று சிபிசிஐடி The Crime Branch, Crime Investigation Department (CB-CID) க்கு மாற்றப்பட்டது. 23.06.2017 வரை இவ்வழக்கை சிபிசிஐடி தான் விசாரித்து வந்தது.

இதற்கிடையில், கே.என்.ராமஜெயத்தின் மனைவி லதா இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று 2014- ல் (CRL OP(MD). 22633/ 2014) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டார்.

இதோ அதற்கான ஆதாரம்:

downloaded2_watermarked

chennaiinf1_watermarked

தன் அடிப்படையில் 07.11.2017 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

அதன் பின்னர் இவ்வழக்கை 08.01.2018 அன்று சிபிஐ (RC.01(S)/2018/CBI/SCB/Chennai) கையில் எடுத்தது.

இதோ அதற்கான ஆதாரம்:

RC0582018S0001_watermarked

சுமார் 5 ஆண்டு காலம் சிபிசிஐடி -The Crime Branch, Crime Investigation Department (CB-CID) வசம் இருந்த இவ்வழக்கு; சிபிஐ The Central Bureau of Investigation (CBI) அதிகாரிகள் கைக்கு வந்தவுடன், அவர்களுக்கே உரித்தான மிக நுணுக்கமான யுக்திகளை பயன்படுத்தி கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கொரோனா (Covid 19) தொற்று பரவல் தடுப்பு காரணமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்த காலக்கட்டத்தில் இவ்வழக்கில் சிபிஐ கள விசாரணை தற்காலிகமாக தடை ஏற்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், கொரோனா (Covid 19) தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சிபிஐ அதிகாரிகள் மீண்டும் இவ்வழக்கு விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு இவ்வழக்கில் பல முக்கிய தடயங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்றத் தேர்தல் 2021 ஏப்ரல் 6 -ல் நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று. அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் முதல் முறையாக தமிழ்நாட்டின் 12-வது முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது கொரோனா (Covid 19) இரண்டாவது அலை தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இந்த காலக்கட்டத்தில் கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ கள விசாரணை தற்காலிகமாக தடைப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன், கொரோனா (Covid 19) தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இவ்வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மீண்டும் மிக சிறப்பாக தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில்தான், சிபிஐ விசாரணையில் இருந்துவரும் கே.என்.ராமஜெயத்தின் கொலை வழக்கை; மாநில காவல்துறைக்கே மாற்ற வேண்டும் என கே.என்.ராமஜெயத்தின் அண்ணன் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் 21.12.2021 மனுத்தாக்கல் செய்தார்.

இதுசம்பந்தமாக டிஜிபிக்கு அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று ந்த மனுவில் கேட்டிருந்தார்.

Hon’ble Thiru. Justice V.Bharathidasan.

இந்த Writ Petition (Crl.) No.257 of 2022 மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி, வி. பாரதிதாசன் விசாரணை அதிகாரி சரியான கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் என் ஆர். இளங்கோ, சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, சிபிஐக்கு உதவ தமிழக காவல்துறை அதிகாரிகள் பட்டியல் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணைக்கு தமிழக காவல்துறை உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும், விசாரணைக்கு உதவ காவல்துறை அதிகாரிகள் பட்டியலை வழங்குகிறோம் என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து தற்போது இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன் மற்றும் சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க வேண்டுமெனவும், அடுத்தக்கட்ட விசாராணையை சிறப்பு குழு புலனாய்வு தொடர வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதை சிபிசிஐடி உயர் அதிகாரி சகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் எனவும், அதை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டதுடன், 15 நாட்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கு விசாரணை முடியும்வரை சிபிஐ அதிகாரி ரவிக்கு வேறு பணிகளை ஒதுக்கக்கூடாது என சிபிஐ-க்கும் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு தேவையாவற்றை செய்து கொடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு நீதிபதி வி. பாரதிதாசன் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை கூடிய விரைவில் தொடங்க வேண்டும் எனவும், பிப்ரவரி 21ஆம் தேதிக்குள் தொடங்கினால் நல்லது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 7 ஆம் தேதிக்கு நீதிபதி வி. பாரதிதாசன் தள்ளிவைத்துள்ளார்.

அந்த உத்தரவின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

downloaded_watermarked

downloaded_watermarked

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply