உலக வானொலி தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோதி அனைத்து வானொலி நேயர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். வானொலி என்னும் சிறந்த ஊடகத்தை செழுமைப்படுத்துபவர்கள் அதன் நேயர்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;
‘’ வானொலி என்னும் அற்புதமான ஊடகத்தை தங்களது திறமை மற்றும் படைப்பாற்றலுடன் செழுமைப்படுத்தும் நேயர்களை உலக வானொலி தினத்தையொட்டி அதன் நேயர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். வீட்டில் இருந்தாலும், பயணங்களின் போதும், மற்ற நேரங்களிலும், வானொலி எப்போதும் மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சமாக உள்ளது. மக்களை இணைக்கும் அற்புதமான ஊடகம் வானொலியாகும்.’’
‘’ மனதின் குரல் நிகழ்ச்சியை ஒட்டி, நேர்மறையான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் பெரும் ஊடகமாக வானொலியை நான் திரும்பத் திரும்ப பார்க்கிறேன். மற்றவர்களின் வாழ்க்கையில் தரமான மாற்றத்தைக் கொண்டு வருபவர்களில் முன்னணியில் அவர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு பங்களித்தவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.’’
–எம்.பிரபாகரன்