2013க்குப் பிறகு சின்ன வெங்காயத்தின் ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவில் 487 சதவீதம் அதிகரிப்பு!-மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சின்ன வெங்காய ஏற்றுமதி பெரும் வளர்ச்சியை கண்டு 2013 க்குப் பிறகு  487 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 11.6 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. 

இதுகுறித்து மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக இலங்கை (35.9%), மலேசியா (29.4%), தாய்லாந்து (12%), ஐக்கிய அரபு அமீரகம் (7.5%) மற்றும் சிங்கப்பூர் (5.8%) விளங்குகின்றன.

இந்தியாவின் அன்னாசி ஏற்றுமதியும் சுமார் நூறு சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 1.63 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இதன் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 3.26 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.

2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக  ஐக்கிய அரபு அமீரகம் (32.2%), நேபாளம் (22.7%), கத்தார் (16.6%), மாலத்தீவுகள் (13.2%) மற்றும் அமெரிக்கா (7.1%).விளங்குகின்றன.

அனைத்து விதமான ஏற்றுமதியிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply