ஹிஜாப் மற்றும் காவி துணி சர்ச்சை!-மறு உத்தரவு வரும் வரை சீருடை மட்டுமே அணிந்து வகுப்பறைக்கு வர வேண்டும்!-பிப்ரவரி 10-ந்தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வு அளித்த உத்தரவின் உண்மை நகல்.

Hon’ble Mr. Chife Justice Ritu Raj Awasthi, High Court of Karnataka.

Hon’ble Mr. Justice Dixit Krishna Shripad

Hon’ble Ms. Justice Khazi Jaibunnisa Mohiuddin.

IN-THE-HIGH-COURT-OF-KARNATAKA-AT-BENGALURU_watermarked

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் அமைந்துள்ள ஒரு பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் புதிய பிரச்னை உருவானது. அங்குள்ள அரசு PUC கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவியர் தலையில் முக்காடாக அணியும் ஹிஜாபை வழக்கம்போல் அணிந்து வந்தபோது வகுப்பில் அமரக் கூடாது என நிர்வாகம் கூறியது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து. இந்து மாணவ, மாணவியர்களில் ஒரு சிலர் காவி துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கினர்.

இந்நிலையில், பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரியும், அதற்கு தடை விதித்து கர்நாடகா மாநில அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராகவும், சில மாணவிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்காக, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, தனது தலைமையிலான 3 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வில் நீதிபதி கிருஷ்ணா தீட்சித், சைபுனிசா மொகிதீன் காஜியை நியமித்தார்.

அந்த வழக்கில் பிப்ரவரி 10-ந்தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், ‘அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த உடைகளை அணிந்து வர கூடாது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவு இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு பிப்ரவரி 11-ந்தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம். மேல்முறையீடு மனுவை உடனே விசாரிக்க முடியாது. இந்த விவகாரம் குறித்து நாங்கள் தீவிரமாக கவனித்து வருகிறோம். கர்நாடகா உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. சரியான நேரம் வரும்போது இந்த விவகாரத்தில் தலையிடுவோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply