தில்லியில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ரம் தாம் ஆலயத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோதி ரவிதாஸ் பிறந்தநாளன்று அவருக்கு வணக்கம் செலுத்தினார்.
தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“புனிதமான ரவிதாஸ் பிறந்தநாளான இன்று தில்லியில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ரம் தாம் ஆலயத்திற்கு நான் பயணம் செய்தேன்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ரவிதாஸ் ஜெயந்தி வாழ்த்துக்கள்”.
“துறவி ரவிதாஸ் அவர்களின் இந்தப் புனித ஆலயம் அனைத்து மக்களுக்கும் உந்துசக்தியாகும். இங்கு வளர்ச்சிப் பணிகளை நிறைவு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதிர்ஷ்டவசமான ஒரு வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்”.
“தில்லியில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ரம் தாம் ஆலயத்தில் மிகச் சிறந்த தருணங்கள்”.
–திவாஹர்