“கவலைக்கிடமாக இருக்கும் கல்லணை சாலை..!-கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள்”!-என்ற தலைப்பில், திருச்சி – கல்லணைச் சாலையின் அவலநிலை குறித்து, நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் உரிய ஆதாரத்துடன் October 13, 2021 8:39 pm அன்று ஒரு செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் (November 14, 2021) இரண்டாவது வாரத்தில் மேற்படி கல்லணை சாலையை தரமாக மேம்படுத்துவதற்காக சாலையின் மேல் பகுதியில் அடிக்கடி சேதமடைந்த தார்சாலையை முற்றிலுமாக தோண்டி அப்புறப்படுத்தும் பணி நடைப்பெற்றது.
இதற்கிடையில் பலத்த மழையின் காரணமாக சாலை பராமரிப்பு பணி இடையில் தடைப்பட்டது. இந்நிலையில், இச்சாலை பராமரிப்பு பணி தற்போது நிறைவடைந்துள்ளது.
நாட்டில் நடக்கும் குற்றம் குறைகளையும்; சமூக அவலங்களையும் உடனுக்குடன் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டும் நாம், அதுபோன்ற குறைகள் சரிசெய்யப்பட்டால் அதையும் வெளியிடுவதுதான் உண்மையான இதழியல் தர்மம். அந்த அடிப்படையில் இதை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.
நமது செய்திக்கு மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழக அரசிற்கும், சம்மந்தப்பட்ட அரசுதுறைச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும், நமது “உள்ளாட்சித்தகவல்” மற்றும் “UTL MEDIA” செய்தி நிறுவனத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
இதுக்குறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
Great sir…..🙏