2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்திற்கு மொத்தம் ரூ.3,375 கோடி செலவில் உள்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இணைந்து இயங்கும் குற்றவியல் நீதி முறை திட்டத்தை அமலாக்க மோதி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதல்படியான இணைந்து இயங்கும் குற்றவியல் நீதி முறை திட்டத்தின் இரண்டாவது கட்டம் தீவிரமான, நவீன காவல் முறையை உறுதி செய்வதை நோக்கிய நடவடிக்கையாக இருக்கும்.
அதிவேக தொடர்புடன் இணையதள கட்டமைப்பு மூலம் அர்ப்பணிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்டதாக இணைந்து இயங்கும் குற்றவியல் நீதி முறை திட்டம் இருக்கும். இந்தத் திட்டத்தின் அமலாக்கத்திற்கு தேசிய தகவல் மையத்தின் (என்ஐசி) ஒத்துழைப்புடன் தேசிய குற்ற ஆவணங்கள் பிரிவு பொறுப்பாக இருக்கும். மேலும் இந்தத் திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் அமலாக்கப்படும்.
–எம்.பிரபாகரன்