நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று 19 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் பதிவான அதிகாரப்பூர்வ வாக்கு சதவீதத்தை பதிவேற்றம் செய்யாத தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்!

Dr. V.பழனி குமார்., தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று (19.02.2022) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று (19.02.2022) காலை 9 மணி வரை பதிவான வாக்கு சதவீதத்தை மட்டும் அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளியிட்ட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், அதன்பிறகு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் இணையத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.

PR-0051-2022-1

தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து சுமார் 19 மணி நேரத்திற்கு மேலாகியும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான அதிகாரப்பூர்வ வாக்கு சதவீதத்தை இந்த செய்தியை நாம் பதிவேற்றம் செய்யும் இந்த நிமிடம் வரை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிடவில்லை.

இதற்கிடையில் இதுகுறித்து நமது ‘UTL MEDIA’ சார்பில் நேற்று (19.02.2022) இரவு 11: 19 மணிக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை தொடர்புகொண்டு விவரம் கேட்டோம். ஒரு நான்கு மாவட்டங்களில் இருந்து இன்னும் முழுமையாக தகவல் வந்து சேரவில்லை. அது இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடும், 10 அல்லது 20 நிமிடங்களில் இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவோம் என்று நம்மிடம் பேசிய தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

ஆனால், இன்று (20.02.2022) காலை 11:30 மணி வரை அதிகாரப்பூர்வ வாக்கு சதவீதம் இணையத்தில் பதிவேற்றம் செய்யாததால் இன்று (20.02.2022) காலை 11:40 மணிக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை நாம் மீண்டும் தொடர்பு கொண்டோம். எங்களின் நீண்ட நேர அழைப்பிற்கு பிறகு அலைபேசி எடுத்த அதிகாரி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடும் என்று நம்மிடம் உறுதியளித்தார்.

ஆனால் இன்று (20.02.2022) மதியம் 1 மணி வரையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான அதிகாரப்பூர்வ வாக்கு சதவீதத்தை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை.

எனவே, உத்தேசமாக வெளி வந்த வாக்கு சதவீத தகவல்களை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

ஒரு வேளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான அதிகாரப்பூர்வ வாக்கு சதவீதத்தை இணையத்தில் வெளியிட்டால் அதை நமது வாசகர்களின் பார்வைக்காக நாம் நிச்சயம் வெளியிடுவோம்.

இதுக்குறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2022/02/19/68534/

http://www.ullatchithagaval.com/2022/02/05/67866/

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply