திட்டங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கவும் திட்டங்களை உரிய காலத்தில் முடிக்கவும் பிரதமரின் விரைவு சக்தி முக்கியமானது என்பதை ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வலியுறுத்தினார்.

சாலை, ரயில்வே போன்ற அனைத்து அமைப்புகளையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதால் திட்டங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கவும், திட்டங்களை உரிய காலத்தில் முடிக்கவும் பிரதமரின் விரைவு சக்தி முக்கியமானது என்பதை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர்  சர்பானந்த சோனாவால் வலியுறுத்தினார்.

 விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இன்று நடமாடும் சரக்குப் பெட்டக ஸ்கேனர் வசதி மற்றும் சாகர்மாலா கருத்தரங்க கூடத்தைத் தொடங்கிவைத்த அவர், இன்றைய போட்டி மிகுந்த உலகில் சிறந்தவற்றில் சிறந்ததே வெற்றிபெறும் என்றார்.

 ரூ.55 கோடி முதலீட்டிலான திட்டங்களை திரு சோனாவால் தொடங்கிவைத்தார். சரக்கு பெட்டகங்களில் கதிர்வீச்சுத் தன்மையுள்ள பொருள்களைக் கண்டறிவதற்காக துறைமுகத்தால் ரூ.30 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள நடமாடும் சரக்குப்பெட்டக ஸ்கேனரையும் அவர் தொடங்கிவைத்தார்.

 துறைமுக ஊழியர்களின் நலனுக்காக ரூ.25 கோடி செலவில் சாலகிராம்புரத்தில் கட்டப்பட்டுள்ள சாகர்மாலா கருத்தரங்க கூடத்தையும் அமைச்சர் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தலைவர்  கே ராமமோகனராவ், துணைத் தலைவர் துர்கேஷ் துபே ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

திவாஹர்

Leave a Reply