உக்ரைன் நாட்டில் தவித்து வரும் திருச்சியை சேர்ந்த மாணவர்!

GIBSON JOSEPH

Document

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய நாட்டின் இராணுவத்தினர் சர்வதேச போர் யுத்த மரபுகளை மீறி தனது அனைத்து இராணுவ வலிமைகளையும் பயன்படுத்தி ஆயுதம் மற்றும் பீரங்கி வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் நாடு மட்டுமல்ல; சர்வதேச சமூகமும் தற்போது பதட்டத்திலும், கவலையிலும் ஆழ்ந்துள்ளது.

இதனால் உக்ரைன் நாட்டில் கல்வி மற்றும் பணி நிமித்தமாக தங்கியிருக்கும் பிற நாடுகளை சேர்ந்த குடிமக்களின் நிலை மிகவும் பதட்டத்திற்கும், கவலைக்குரியதாக மாறிவருகிறது. உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி, பாதுகாப்பாக தங்குவதற்கு இடமுமின்றி, உயிர் பயத்தில் லட்சக்கணக்கான நபர்கள் தவித்து வருகின்றனர்.

இவர்களையெல்லாம் மீட்டு தாய் நாட்டிற்கு அழைத்துச் வருவதற்கு அந்தந்த நாட்டு தலைவர்கள் பெருமுயற்சி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நமது இந்திய பிரதமரும் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் மற்றும் அந்தந்த மாநில முதலமைச்சர்களும் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இவற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும், பணியாளர்களும் உக்ரைன் நாட்டில் தவித்து வருகின்றனர். அவர்களை தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்து வரும் முயற்சியில் இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், வடக்கு காட்டூர், வேணுகோபால் நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கிப்சன் ஜோசப் என்பவர், உக்ரைன் நாட்டிற்கு படிக்கச் சென்ற வகையில் National Aerospace University (khai) Electro instrumental Yi street 6 A Hostel, Kharkov, Ukraine- 61070. என்ற முகவரியில் தனது நண்பர்களுடன் தற்போது இருந்து வருகிறார்.

உக்ரைனில் ரஷ்ய படையின் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இப்பகுதியிலும் போர் பதட்டம் நிலவி வருகிறது. அப்பகுதியில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்ட நிலையில் அங்கு உள்ள கட்டிடங்களில் பதுங்கி உள்ளனர்.

எனவே உக்ரைன் நாட்டில் யுத்தப் பகுதியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போதிய உணவு, குடிநீர், உறக்கமின்றி மரண பயத்தில் இருந்து வரும் கிப்சன் ஜோசப் போன்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களையும், பணி நிமித்தமாக தங்கியுள்ள நபர்களையும், உடனடியாக அங்கிருந்து பத்திரமாக மீட்டு, இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply