2021-22 காரீப் சந்தைப் பருவத்தில், விவசாயிகளிடமிருந்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நெல் கொள்முதல் செய்வது கடந்த ஆண்டைப் போலவே சுமூகமாக நடைபெறுகிறது.
2021-22ம் ஆண்டு காரீப் சந்தைப் பருவத்தில் 2022 பிப்ரவரி 27ம் தேதி வரை தமிழகம்,கேரளா, கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உட்பட அரிசி உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் 707.24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக இதுவரை 96.41 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ. 1,38,619.58 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19,18,889 மெட்ரிக் டன் நெல் 2,91,465 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, இதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.3761.02 கோடி வழங்கப்பட்டுள்ளது.
–எம்.பிரபாகரன்