10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை குறித்த அறிவிப்பை இன்று (02.03.2022) காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
கீழ்காணும் அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும்.
TN.SCHOOL-EDUCATION-DEPT_watermarked
12 ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.5 ஆம் தேதி தொடங்கி மே.28 ஆம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்: ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்படும்.
11 ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.9-ஆம் தேதி தொடங்கி மே.31 ஆம் தேதி வரை நடைபெறும்.11 ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்: ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும்.
10 ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.6-ஆம் தேதி தொடங்கி மே.30 ஆம் தேதி வரை நடைபெறும்.10 ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்: ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படும்.
10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான செய்முறைத் தேர்வுகள்: ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 2 ஆம் தேதி வரை நடைபெறும்.
-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com