உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் விமான நிலையத்தில் வரவேற்றார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்துவர மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை சிறப்பு விமானம் மூலம் தில்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்த 228 மாணவர்களை, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் & பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் நேரில் சென்று வரவேற்றார்.

இது குறித்து எல் முருகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோதியின் சீரிய முயற்சியால் உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பிய 228 மாணவர்களை தில்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply