ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘பாலின உரையாடல்’ நிகழ்ச்சி!-3000க்கும் மேற்பட்டோர் காணொலி மூலம் பங்கேற்பு.

தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டம் ஆகியவை கடந்த 11ம் தேதி நடத்திய, 3வது ‘பாலின உரையாடல்’ நிகழ்ச்சியில் 34 மாநிலங்களில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் பாலினக் கண்ணோட்டத்துடன், தீன்தயாள் அந்தியோதையா திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, தேசிய அளவில் நடத்தப்பட்ட காணொலி நிகழ்ச்சிதான் இது. இந்த கலந்துரையாடலின் கருப்பொருள், “பெண்கள் கூட்டம் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துதல்’’ ஆகும். அம்ரித் மகோத்ஸவத்தின் கீழ் ‘புதிய பாரதத்தின் பெண்கள்’ என்ற கருப்பொருளுடன், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் சிறப்பு வாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி மூலம் சுய உதவிக் குழுவைச்சு சேர்ந்த பெண்கள் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார திட்டங்களின் பயனாளிகள் ஆகியோரின் குரல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைத் தேசிய ஊரக வாழ்வாதார திட்ட அதிகாரிகளால் அறிய முடிந்தது. .

இந்தக் காணொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் திரு நகேந்திரநாத் சின்ஹா, பழக்கவழக்கம் மாற்றம் மற்றும் சேவைகளைப் பெறுவதில் பெண்களின் ஆற்றலைச் சுட்டிகாட்டினார். 5.5 கோடி ஊரக வீடுகளில் கோவிட்-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில், நாடு முழுவதும் உள்ள சுயஉதவிக் குழுப் பெண்கள் முக்கிய பங்காற்றியதாக அவர் கூறினார்.

உணவு, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்கள் சார்ந்த நோக்கம் மற்றும் முன்முயற்சிகளை ஊரக மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர் திருமதி நிதா கேஜ்ரிவால் பகிர்ந்து கொண்டார்.

ஊட்டசத்துக் குறைபாட்டுக்கு எதிராகப் போராடுவது, கிராமங்களில் உள்ள வீடுகளில் வருமானத்தை அதிகரிப்பது, உற்பத்தியை மேம்படுத்துவது, ஊட்டசத்துமிக்க பயிர்களை பல்வகைப்படுத்துவது, சமூகப் பழக்க வழக்க மாற்றம் போன்ற பணிகளில் சுய உதவிக் குழுவினர் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply