சகோதரி குழந்தைகளுக்கு காது குத்து!-விபத்தில் இறந்து போன தாய் மாமன் சிலை வடிவில் வந்து சீர்வரிசை செய்த அதிசயம்!

சிலை வடிவில் இருக்கும் தாய் மாமன் பாண்டித்துரை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சௌந்தரபாண்டி, பசுங்கிளி. தம்பதியின் மகன் பாண்டித்துரை, இவரது 21வது வயதில், அதாவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து போனார்.

இறந்து போன பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ, மகன் மோனேஷ் குமரன். ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய உருவ (சிலிக்கன்) சிலையை வைத்து தாய்மாமன் சீர்வரிசை செய்முறைகள் செய்யப்பட்டு, சிலை வடிவில் இருந்த பாண்டித்துரையின் மடியில் வைத்து அவரது சகோதரி குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது.

காது குத்துதற்கு முன்னதாக தாய்மாமன் பாண்டித்துரையின் சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபம் வந்தது.அதன்பின் சிலை வடிவில் இருந்த பாண்டித்துரையின் மடியில் குழந்தைகளை அமரவைத்து காதணி விழா நடைபெற்றது.

அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது பாண்டித்துரையின் நீண்ட நாள் ஆசை. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் விபத்தில் இறந்து போனார்.

இந்நிலையில், பாண்டித்துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவரது தாய் பசுங்கிளி, பெங்களூரில் உள்ள சிற்பியிடம் பாண்டித்துரையின் உருவம் போலவே தத்துரூபமாக இருக்கும்படி ரூ.5 லட்சம் செலவில் சிலை செய்து தனது பேரக் குழந்தைகளின் காதணி விழாவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்.

இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

One Response

  1. MANIMARAN March 14, 2022 10:01 pm

Leave a Reply