ஹோலிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு:-
“வண்ணங்களின் விழாவான மங்களகரமான ஹோலிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரம்பரிய ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்று கூடி, தன்னெழுச்சியான, மகிழ்ச்சியான வாழ்க்கை கொண்டாட்டத்தின் உணர்வில் மகிழ்ச்சியடைவதற்கான நேரமாகும். ஹோலிக்கு முந்தைய நாள் நெருப்பு மூட்டுவது தீமைக்கு எதிரான நல்லொழுக்கத்தின் வெற்றியைக் குறிக்கிறது.
இந்த மங்களகரமான ஹோலிப் பண்டிகையின் போது, நமது சமூகத்தை ஒன்றாக வைத்திருக்கும் நட்பு மற்றும் நல்லுறவின் பிணைப்பை வலுப்படுத்த முயற்சிப்போம்.
இந்தப் பண்டிகை நமது வாழ்வில் அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும்.”
–திவாஹர்