ஐசிஜிஎஸ் சாக்ஷம் கடல் ரோந்துக் கப்பலின் சேவைகளைப் பாதுகாப்பு செயலாளர் கோவாவில் தொடங்கி வைத்தார்.

105 மீட்டர் கடல் ரோந்து கப்பல்கள் வரிசையின் ஐந்தாவது இந்திய கடலோர காவல்படை கப்பலான சாக்‌ஷமை 2022 மார்ச் 16 அன்று கோவாவில் பாதுகாப்புத் துறைச் செயலாளர் டாக்டர் அஜய் குமார், படையில் இணைத்து வைத்தார்.

தலைமை இயக்குநர் திரு வி எஸ் பதானியா மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முதுநிலைப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது. ‘சாக்ஷம்’ என்றால் ‘திறமையானது’ என்று பொருள்படும்,

இந்த 105 மீட்டர் கடல் ரோந்து கப்பல் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் மூலம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது. மேம்பட்ட தொழில்நுட்பம், தகவல் தொடர்பு சாதனங்கள், சென்சார்கள் மற்றும் இயந்திரங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. அதி நவீன துப்பாக்கிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

ஒரு இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர் மற்றும் நான்கு அதிவேகப் படகுகளை ஏற்றிச் செல்லும் வகையில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளத. கடல்களில் எண்ணெய் கசிவைக் கட்டுப்படுத்துவதற்கான மாசு எதிர்விணை உபகரணங்களைச் சுமந்து செல்லும் திறனையும் இந்த கப்பல் கொண்டுள்ளது.

கடலோரக் காவல்படையின் இந்த கப்பல் கொச்சியில் இருந்து செயல்படும். இந்திய கடலோர காவல்படையின் திறனை மேம்படுத்தியுள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply