மின்சார வாரியத்தில் ஷாக்கடிக்கும் ஊழல்!- தமிழ்நாடு பாஜக தலைவர் K.அண்ணாமலை அறிக்கை.

பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின்
பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக்
குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்

தமிழக மின்சார வாரியத்தில் தகிடுதத்தங்கள் நடைபெறுகின்றன. சட்ட விதிமுறைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு தகுதியில்லாத அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு கோபாலபுரத்து ஆசிகளுடன் கோலாகலமாக கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர்கள் வழங்கப்படுகிறது. மக்களின் வரிப்பணங்கள், சூறையாடப்படுகிறது.

BGR Energy நிறுவனத்திற்கு ஆதரவாக கோபாலபுர குடும்ப அரசு செயல்படுகிறது என ஆதாரத்துடன் இதற்கு முன்னர் நான் விரிவாக விளக்கத்துடன் பொதுவெளியில் நிரூபித்த போது, என் மீதும், இன்னொருவர் மீதும், ரூ. 500 கோடிக்கு, மான நஷ்ட வழக்கு தொடுப்பதாக நோட்டிஸ் விட்டார்கள்.

இதை வெளிப்படுத்துவதற்கு, உண்மையை உரைக்க உதவி செய்ய வேண்டியவர்கள், நான் சுமத்திய குற்றச்சாட்டை விட, என் மீது போடப்படும் வழக்கையே பிரதானப்படுத்தினர்.

ஆனால், அன்று நான் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் தற்போது முற்றிலும் உண்மை…உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை, என்பது சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் கடித்ததின் மூலமே சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணம் ஆகியுள்ளது.

அரசுக்கும், திட்டப் பணிகளுக்கும் தரமற்ற கட்டுமானத்தினாலும் காலதாமதத்தினாலும் இழப்பீட்டை ஏற்படுத்திய, இப்படிப்பட்ட நிறுவனத்தை, வருங்கால டெண்டரில் பங்கேற்க விடாமல் தடை செய்து கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் தடுக்கப்பட வேண்டிய தரமற்ற நிறுவனத்திற்கு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. கொஞ்சம் நஞ்சமல்ல ஏறத்தாழ 4,442 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்கள் கோபாலபுரத்து அனுமதி என்ற அடிப்படையில் மார்ச் மாதம் 10ஆம் தேதி கொடுக்கப்படுகிறது.

இதே நிறுவனம், இதற்கு முன்னர் தான் ஏற்றுக்கொண்ட பணியை, அதாவது ( 2008-2011 ) ஆண்டில், சுமார் 3 வருடத்தில் முடிக்க வேண்டிய மேட்டூர் அனல்மின் நிலைய பணிகளை, மேலும் 2 ஆண்டுகள் தாமதமாக 2013ல் முடித்த போதும் அரசுக்கு அபராதம் கட்டவில்லை. அரசும் அபராதம் விதிக்கவில்லை.ஆனால் புதிதாக ஆர்டர் கிடைக்கிறது,

மிக காலதாமதமாக செயல்பட்டு, அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, திட்டப்பணிகளை தோல்வியடையச் செய்த, நிறுவனத்திற்கு, எந்த அடிப்படையில் மீண்டும் ரூ.4,442.75 கோடி ஆர்டர் கொடுக்கப்பட்டது என்பதை அறிவாலயம் அரசு விளக்க வேண்டும்.

அரசின் டெண்டர் விதிகளின்படி, ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம், உடனடியாக டெண்டர் தொகையின் 10 சதவீதத்தையாவது செலுத்தியிருக்க வேண்டும். அப்படி செலுத்தாத நிறுவனம், தகுதி இழப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். BGR Energy நிறுவனம் 2019ல் கிடைத்த ஆர்டருக்கு ஏப்ரல் 2021 வரை 10% பிணையத் தொகை (ரூ.444.2 கோடி) கட்ட முடியாத நிலையில் இருந்தது. BGR Energyன் டெண்டரை 2021ல் ரத்து செய்தது TANGEDCO.

அறிவாலயம் அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன்னர் பி ஜி ஆர் எனர்ஜி நிறுவனத்தின் பங்கின் விலை, மே 7 , 2021, ஆன்று ரூ.46.50 இருந்தது. ஆனால் தற்போது ஒரு பங்கின் விலை ரூ102.5யாக உயர்ந்துள்ளது. அதாவது கோபாலபுரத்தில் நல்லாசிகள் பெற்றவுடன் இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு பத்தே மாதத்தில் 120.4% உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம், அறிவாலயத்தில் ஆசைகளால் இவர்களுக்கு காட்டப்பட்ட சலுகைகளே.

2016 ஆம் ஆண்டில், கேஸ் டர்பைன் தொடர்பான சிக்கலைக் கையாள்வதில் TANGEDCO & BGR எனர்ஜி இரண்டையும் CAG திட்டவட்டமாகக் கட்டுப்படுத்தியது, இதன் விளைவாக ரூ. 2010-11ம் ஆண்டில் 72 கோடி. மின்நிலையத்தில் நிறுவப்பட்ட கேஸ் பூஸ்டர் கம்ப்ரசரை இயக்குவதற்கு பிஜிஆர் தேவையான திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்று ஒரு குறிப்பிட்ட குறிப்பு உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக உயர்நீதிமன்றத்தில், BGR energy நிறுவனத்திற்காக வாதாடியது, திமுகவைச் சேர்ந்த திரு.பி.வில்சன் அவர்கள். அதாவது மக்களே, இந்த வழக்கு நடந்தது திரு செந்தில் பாலாஜி அவர்கள் மின்சார அமைச்சர் ஆன பிறகு, திமுக ஆட்சியில், திமுக அரசுக்கு எதிராக வாதாடியது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்கள்.

2017ல் BGR ENERGY -ன் ரூ3447.9 கோடி வருமானம், இதுவே வேகமாக சரிந்து, 2021ல் வெறும் ரூ.1,139.72 வருமானம், ஏறத்தாழ ரூ.400 கோடி நஷ்டம் அடைந்து, பிணைத்தொகை கட்ட முடியாமல் இருந்த பொழுது தான் தமிழக அரசு ரூ.4442.75 கோடி மதிப்பிலான ஆர்டர் தருகிறது.

வருமான வரி ஆணையர், 2011 முதல் 2015 வரையிலான கணக்குகளுக்கு 2017 ஆம் ஆண்டில் பிஜிஆர் எனர்ஜியின் வளாகத்தில் சோதனை நடத்தினார். 113 கோடி. மேட்டூர் அனல் மின் நிலையத் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தக் காலக்கட்டத்தில் பிஜிஆர் ஆற்றல் மூலம் இந்தப் பணம் ரொக்கமாகப் பெறப்பட்டது. CAG இல் அதே கட்டத்தில், TANGEDCO BGR இல் செயல்திறன் இல்லாததற்காக அபராதம் விதிக்கத் தவறிவிட்டது என்பதையும், அதற்குப் பதிலாக சரியான நேரத்தில் பணம் செலுத்தப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 113 கோடிகள் TANGEDCO அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர்களைக் காப்பாற்றியதற்காக கொடுக்கப்பட்டதா?

ஒரு வித்தியாசமான நிகழ்வுகளைத் தவிர, BGR இன் சந்தை மூலதனம் கடந்த 5 ஆண்டுகளில் அவற்றின் இழப்புகள் மற்றும் கணிசமான மதிப்புள்ள புதிய ஒப்பந்தங்களை பதிவு செய்ய இயலாமை காரணமாக சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த காலத்தில் ஒரு உத்தரவை சரியான நேரத்தில் நிறைவேற்ற இயலாமை இருந்த போதிலும், எல்லாம் TANGEDCO BGR மீது பொறுப்பை ஒப்படைத்தது ஒரு ஆச்சரியம்.

இதுபோன்ற பல மாயாஜாலங்களை TANGEDCO, திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறது. அப்படி நடத்திக்கொள்ள, கோபாலபுரத்தில் முழு இசைவும் கிடைத்திருக்கிறது. அவர்கள் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை திரும்பப் பெறத் தயாராக இருப்பது திமுகவின் அரசியல் செல்வாக்கின் காரணமாக மட்டுமே சாத்தியமாகும்.

இவ்வாறு தமிழ்நாடு பாஜக தலைவர் K.அண்ணாமலை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply