கூடலூர் நகராட்சியில் டெண்டர் விட்டதில் முறைகேடு!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகார் அனுப்பியுள்ள நகராட்சி உறுப்பினர்கள்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் 3.6 கோடி மதிப்புள்ள 62 பணிகளுக்கு டெண்டர் விட்டதில் முறைக்கேடு நடந்திருப்பதாக, கூடலூர் நகராட்சி உறுப்பினர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பொது நிதி திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள வேண்டாம் எனவும், நகராட்சி நிர்வாகத்தின் பிராந்திய இயக்குனரிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் அறிவித்துள்ளது (அறிவிப்பு நகல் 21627/2021/எம்3 நாள் 20/9/2021)

ஆனால், அத்தகைய அனுமதி எதுவும் பெறாமலேயே 22/ 11 / 2021 அன்று டெண்டர் நடைபெற்றுள்ளது. இந்த பணிக்கான அறிவிப்புகள் எந்த பத்திரிகைகளிலும் வெளிவரவில்லை. நகராட்சி நிர்வாகத்தில் பதிவு பெற்றுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு தபால் மூலம் அனுப்பவும் இல்லை. தொலைபேசி மூலம் தெரிவிக்கவும் இல்லை.

ஒரு சில ஒப்பந்ததாரர்களின் லாபத்திற்காக மறைமுகமாக ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. இதற்கு கூடலூர் நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் முழு காரணம்.

இவ்வாறு மறைமுகமாக நடைபெற்ற டெண்டருக்கு 08 /11/ 2021 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது போன்று பொய்யான அறிவிப்பு தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித நாளிதழ்களில் வெளிப்பாடததே சான்று.. மேலும், அந்த நகலில் ஆணையாளர் கையொப்பம் இல்லாததும் ஒரு சான்று. மேலும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தையும் தாண்டி இரவு நேரத்திலும் ஒப்பந்தப்புள்ளிக்காண பணம் பெறப்பட்டுள்ளது. நகராட்சியின் கருவூலத்தை ஆய்வு செய்தாலே இ.ந்த உண்மை தெரியவரும்.

3.6 கோடி மதிப்புள்ள 62 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகளை தனது குறிப்பிட்ட வார்டுகளை மட்டுமே உள்ளடக்கி மற்ற வார்டு மக்களுக்கு துரோகம் விளைவித்து ஒரு பணியே ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளாக பிரித்து டெண்டர் விடப்பட்டுள்ளது. இது டெண்டர் விதிமுறைகளை மீறிய செயலாகும்..

இதற்கு அன்றைய ஆணையாளர் அசோக் குமார் டெண்டர் நடைபெற்ற அன்று பணியிடமாற்றம் பெற்று செல்வதால், நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதியிடம் பணி ஒப்படைப்பு (delegation) செய்து சென்றார். இதனை பயன்படுத்தி ஆளும் கட்சியான திமுக கூடலூர் நகர செயலாளர் ராஜேந்திரன் அறிவுரையின்படி நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் மற்றும் மாதாந்திர கூட்டம் நடத்த (special officer) அதிகாரம் இல்லாத நகராட்சி பொறியாளர், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தற்போதைய புதிய ஆணையாளர் ராஜேஷ்வர் வருவதற்கு முன்பாகவே அவசர, அவசரமாக 27/ 11 / 2021 அன்று மாதாந்திர கூட்டம் நடத்தி கோரப்பட்ட 62 பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளியை மன்ற தீர்மானத்துடன் பணி ஆணை வழங்கியுள்ளார்கள். இத்தகைய முறைகேடுகளை தாண்டி மேலும் சில முறைகேடுகள் கூடலூர் நகராட்சியில் நடந்துள்ளன.

எனவே நடைபெற்ற டெண்டரை ரத்து செய்து, நடைபெற்றுள்ள முறைகேடுகளை ஆய்வு செய்து இதற்கு காரணமான அலுவலர்கள், ஆணையாளர் அசோக்குமார், நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி, மேற்பார்வையாளர் சிவபாக்கியம் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இந்த முறைகேடான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து மீண்டும் அனைத்து வார்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு முறைப்படி அறிவிப்பினை வெளியிட்டு டெண்டர் நடைபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு கூடலூர் நகராட்சி உறுப்பினர்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

-செந்தில் குமார்.

Leave a Reply