நாட்டின் மிகப்பெரிய இரும்புத்தாது உற்பத்தி நிறுவனமான கனிம வள மேம்பாட்டுக் கழகம் ட்ரோன் மூலம் கனிம வளங்களை. கண்டறிவதற்காக காரக்பூர் ஐஐடி-யுடன் புதன்கிழமை அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர் திரு சுமித் தேப், நிதிப்பிரிவு இயக்குநர் திரு அமிதவா முகர்ஜி, தொழில்நுட்ப இயக்குநர் திரு சோம்நாத் நந்தி, தயாரிப்புப் பிரிவு இயக்குநர் திரு டி கே மொகந்தி மற்றும் ஐஐடி பேராசிரியர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்ச்சியில் பேசிய தேசிய கனிமவள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநர் திரு சுமித் தேப், நாட்டின் கனிம வளங்களைக் கண்டறிவதற்கான ட்ரோன் மூலம் புவி இயற்பியல் ஆய்வை நடத்தும் முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக தேசிய கனிவள மேம்பாட்டுக் கழகம் இருக்கும் என்று கூறினார்.
மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு கனிம வளங்கள் மற்றும் சத்தீஸ்கரில் பெலோடா-பெல்முண்டி என்ற இடத்தில் வைரங்களைக் கண்டறியும் பணியிலும் தேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
–திவாஹர்