நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே மூடப்பட்டிருந்த தார் கலவை ஆலை திறப்பு!-அப்பகுதி மக்கள் எதிர்ப்பு!-போலீஸ் குவிப்பு.

அதிமுக ஆட்சியில் சீல் வைக்கப்பட்ட தார் கலவை ஆலை.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி பகுதியில் பல ஆண்டுகளாக தார் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் மாசுக்களால் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை மூட வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வுக்குப் பின் சீல் வைத்து மூடப்பட்ட இந்த ஆலை கடந்த மூன்று நாட்களுக்கு முன் போலீசார் பாதுகாப்புடன் திறந்து செயல்படத் துவங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராம மக்களை நேற்று நேரில் சந்தித்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் இப்பிரச்சினை குறித்து கேட்டறிந்தார்.

அப்போது கிராமத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய ஆதார் மற்றும் ரேஷன் கார்டு நகல் உடன் பிரதமர் நரேந்திர மோதி பார்வைக்கு எடுத்து செல்ல பாஜக தலைவர்களிடம் வழங்குவதற்கான மனுக்களை வழங்கினர்.

அந்தப் பகுதியில் உள்ள இந்த அபாயகரமான ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

இப்பிரச்சினை பெரிதாவதற்குள் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில் குமார்

Leave a Reply