விமான நிலையங்களில் பாதுகாப்பு முறையை மேம்படுத்த பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஊழியர்கள் விமான நிலையங்களில் நுழைவதற்கான பயோ-மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு மற்றும் வாகனங்கள் நுழைவதற்கான ரேடியோ அதிர்வு அடையாள முறை ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையங்களில் உடல் பரிசோதனை கருவிகள் படிப்படியாகப் பொருத்தப்பட்டு வருகின்றன.
மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜென்ரல் வி கே சிங் பதிலளிகையில் இதைத் தெரிவித்தார்.
–எம்.பிரபாகரன்