சாலை கட்டுமானத்தின் தரத்தை உறுதி செய்ய கண்காணிப்பு செயல்முறை!

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.

தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமான தரத்தை கண்காணிக்கவும், சரிபார்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் அமைச்சகம் மற்றும் இந்திய சாலைகள் அமைப்பின் விவரக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள தரநிலைகளின்படி கட்டப்பட்டுள்ளன.

ஒப்பந்தம்/சலுகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தர உத்தரவாதம்/கட்டுப்பாட்டை செயல்படுத்துவதற்கான தினசரி மேற்பார்வைக்காக, ஆணையத்தின் பொறியாளர்/சுயாதீனப் பொறியாளராக ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தரம் குறைந்த பணிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அவை சரி செய்யப்பட்டு விவரக் குறிப்புகளின்படி மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் அதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண்பது தொடர்ச்சியான செயல்முறையாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், எல்லையோர சாலைகள் அமைப்பு, பொதுப்பணித் துறைகள்/ சாலை கட்டுமானத் துறைகள்/ மாநில அரசுகளின் அமைப்புகள்/ யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தரம் குறைந்த பணிகளை திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏதேனும் தவறுகள் ஏற்பட்டால், தவறிழத்த நிறுவனங்களுக்கு எதிராக ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply