நாகாலாந்து தலைநகர் கொஹிமாவில் நடைபெற்ற 56-ஆவது தேசிய ஓட்டப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய ரயில்வே அணி தங்கம் வென்றது. ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த வர்ஷா தேவி, மஞ்சு யாதவ், பிரினு யாதவ், மன்னி தேவி ஆகியோரைக் கொண்ட குழு போட்டியில் இப்பதக்கத்தை வென்றது,
ஆடவர் பிரிவில் இந்திய ரயில்வே அணியின் நரேந்திர பிரதாப், தினேஷ், வீரேந்திர குமார் பால், ஹர்ஷத் மாத்ரே ஆகியோரைக் கொண்ட குழு வெள்ளிப் பதக்கம் வென்றது.
நாட்டில் மிகப்பெரிய விளையாட்டுப் பணியாளர்களை கொண்ட துறையாக இந்திய ரயில்வே உள்ளது. நாட்டின் விளையாட்டுப் பிரிவில் அளவில்லா பங்களிப்பை அது வழங்கியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற 7 பதக்கங்களில் 4 பதக்கங்களை வென்றவர்கள் இந்திய ரயில்வேயைச் சேர்ந்தவர்கள்.
–எம்.பிரபாகரன்
Congratulations,. 👏👏👏👏🌺🙏🤝