டாக்டர். பிரமோத் சாவந்த் மற்றும் அவரது அமைச்சர்கள் குழுவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து!

கோவாவின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட டாக்டர். பிரமோத் சாவந்திற்கும் அவரது அமைச்சர்கள் குழுவுக்கும் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவா மக்களுக்கு நல்லாட்சியை ஒட்டுமொத்தக் குழுவும் வழங்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “கோவாவில் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட @DrPramodPSawant மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள். கோவா மக்களுக்கு நல்லாட்சியை ஒட்டுமொத்தக் குழுவும் வழங்கும் என்றும், கடந்த தசாப்தத்தில் நடைபெற்ற நற்பணிகளை தொடரும் என்றும் நான் நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.

திவாஹர்

Leave a Reply