2022 -ம் ஆண்டு பத்ம விருது பெற்றவர்களின் இரண்டாவது குழுவினர் தேசிய போர் நினைவிடத்திற்கு வந்தனர்!

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெற்றவர்களின் இரண்டாவது குழுவினர்  மார்ச் 29, அன்று புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றனர். 2022 மார்ச் 28, 2022 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருது வழங்கும்  விழா-II  நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2022-ம்  ஆண்டிற்கான இரண்டு பத்ம விபூஷன், ஒன்பது பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார். தேசிய போர் நினைவிடத்தை பார்வையிட்டவர்களில் பத்ம விபூஷன் விருது பெற்ற டாக்டர். பிரபா அத்ரே, தேசிய போர் நினைவிடத்தில் வீர மரணமடைந்த  மாவீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பத்மஸ்ரீ விருது பெற்ற  போலந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் (டாக்டர்) மரியா கிரிஸ்டோஃப் பைர்ஸ்கி, தாய்லாந்தின் டாக்டர் சிர்பத் பிரபாந்த்வித்யா, திருமதி. பசந்தி தேவி, தனேஸ்வர் எங்டி, குரு துல்கு ரின்போச்சே, டாக்டர் (பேராசிரியர்) ஹர்மோஹிந்தர் சிங் பேடி, சத்குரு பிரம்மேஷானந்த் ஆச்சார்யா ஸ்வாமிஜி மற்றும் ஸ்ரீ அப்துல் இமாம்சாப் நடகட்டின் ஆகியோரும் அப்போது உடனிருந்தனர்.

விருது பெற்றவர்கள் தேசிய போர் நினைவிடத்தைச் சுற்றி சென்றபோது,  ஆயுதப் படைகளின் துணிச்சலான செயல்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் தேசபக்தி, கடமை, வீரர்களின் துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவற்றின் விழுமியங்களை வெளிப்படுத்துவதாகக் கூறி, தேசிய போர் நினைவிடத்திற்கான பயணத்திற்கு  ஏற்பாடு செய்ததற்கு அரசின் முயற்சிகளை விருது பெற்றவர்கள் பாராட்டினர். மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நினைவுச் சின்னத்தைப் பார்வையிடவும், வீரர்களின் வீரக் கதைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“இங்கு வந்து எங்கள் வீரர்களுக்கு மரியாதை செலுத்தியது எங்களுக்கு ஒரு பெரிய கவுரவம். அவர்கள் நம்மைப் பாதுகாத்து, நம் தேசத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதால் நாங்கள் அவர்களைப் பற்றி உண்மையிலேயே பெருமைப்படுகிறோம், ”என்று பத்ம விபூஷன் விருது பெற்ற புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய பாடகர் டாக்டர் பிரபா அத்ரே கூறினார், .

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெற்றவர்களில், பத்ம பூஷன் விருது பெற்ற  ஸ்ரீ தேவேந்திர ஜஜாரியா மற்றும் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற  சர்தார் ஜக்ஜித் சிங் தர்தி, ஸ்ரீ காஜி சிங் மற்றும் பண்டிட் ராம் தயாள் ஷர்மா ஆகியோர் அடங்கிய  முதல் குழு, மார்ச் 22, 2022 அன்று  நினைவுச்சின்னம் உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply