வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இன்று (31/03/2022) உறுதி செய்தது.
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், நவம்பர் 1, 2021 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே. முரளி சங்கர் ஆகியோர், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.
Madras-HC_Reservation_watermarked
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மற்றும் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 15, 16-ம் தேதிகளில் நடந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.
28000_2021_5_1501_34552_Judgement_31-Mar-2022_watermarked
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (31/03/2022) தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பூஷன் ராமகிருஷ்ணா கவாய் ஆகியோர், வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை. மேலும், மக்கள் தொகை அடிப்படையில் சாதிய ரீதியிலான உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அதற்கான காரணத்தை மாநில அரசுகள் சொல்ல வேண்டும். ஆனால் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் அதற்கான காரணம் எதுவும் சரியாக இல்லை என நாங்கள் கருதுகிறோம்.
அதனால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இதுசம்மந்தமாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
https://www.ullatchithagaval.com/2021/11/01/63328/