‘உகாதி, குடி படவா, சைத்ர சுக்லாதி, சேட்டி சந்த்’ ஆகிய விழாக்களையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியின் முழுவிவரம்-
‘உகாதி, குடி படவா, சைத்ர சுக்லாதி, சேட்டி சந்த்’ ஆகிய மகிழ்ச்சிகரமான, புனிதமான நாளில் நாட்டு மக்களுக்கு எனது இனிய, நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரம்பரியமான புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் இந்த விழாக்கள் நமது வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்.
நமது நாட்டின் பலவகையான பாரம்பரிய வழிகளில் பல மாநிலங்களில் கொண்டாடப்படும் இந்த விழாக்கள் நமது வளமான பன்முகக் கலாச்சாரத்தை, அடிப்படையான ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றன.
இந்த விழாக்கள் நமது நாட்டில் வளத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும். நமது நாட்டு மக்களிடையே சகோதரத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்தட்டும்.
–திவாஹர்