தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்தின் சாதனைச் செயல்பாடுகள்!

நாட்டின் மிகப்பெரிய இரும்புத் தாது உற்பத்தியாளரான எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம மேம்பாட்டு நிறுவனத்தின் (என்எம்டிசி), ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் விற்பனை 2022 பிப்ரவரியில் முறையே 42.15 மெட்ரிக் டன் மற்றும் 40.70 மெட்ரிக் டன் ஆக இருந்தது.

கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது உற்பத்தியில் 23% மற்றும் விறபனையில் 22% வளர்ச்சியை நிறுவனம் கண்டுள்ளது. நிலையான வளர்ச்சியைக் கண்டு வரும், இந்த என்எம்டிசி, இது வரை இல்லாத அளவில் இந்தாண்டு முன்னேற்றம் அடைந்துள்ளது.

2022 நிதியாண்டின் நான்காம் காலாண்டுக்கான ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் விற்பனை முறையே 13.84 மெட்ரிக் டன் மற்றும் 12.34 மெட்ரிக் டன் ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியோடு ஒப்பிடும் போது உற்பத்தியில் 12% மற்றும் விற்பனையில் 12% வளர்ச்சியை நிறுவனம் கண்டுள்ளது. என்எம்டிசியின் சிறந்த காலாண்டு செயல்பாடு இதுவாகும். 2022 மார்ச் மாதத்தில் இரும்புத் தாது உற்பத்தி 4.98 மெட்ரிக் டன் மற்றும் விற்பனை 4.21 மெட்ரிக் டன் என என்எம்டிசி அறிவித்துள்ளது.

சிறந்த செயல்திறனுக்காக என்எம்டிசி பணியாளர்களை வாழ்த்திப் பேசிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு சுமித் தேப், “புதிய சாதனையை என்எம்டிசி படைத்துள்ளது. மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்கு டிஜிட்டல்மயமாக்கல் பங்களிக்கத் தொடங்கியுள்ளது, நாட்டில் எஃகு நுகர்வை அதிகரிக்க இந்திய அரசு முயல்வதால், இத்துறையில் சிறப்பான பங்கை என்எம்டிசி ஆற்றி தற்சார்புக்கு வழிவகுக்கும்,” என்றார்.

திவாஹர்

Leave a Reply