தொலைதூர ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்படுவதன் மூலம் பண்டிகை, கோடைகால விடுமுறை, ஆகியவற்றின் காரணமாக 2022 மார்ச் மாதத்தில் ரயில்களில் முன்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் 2022 மார்ச் மாதத்தில் சட்டவிரோதமாக பயணச்சீட்டு பதிவு செய்யும் போலி விற்பனையாளர்களுக்கு எதிராக ரயில்வே பாதுகாப்புப் படை நடவடிக்கை மேற்கொண்டது.
இதன் மூலம் 341 அங்கீகரிக்கப்பட்ட ஐஆர்சிடிசி முகவர்கள் உட்பட 1,459 போலி விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஐஆர்சிடிசி முகவர்கள் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 366 ஐஆர்சிடிசி முகவர்களின் மின்னஞ்சல் முகவரியும், 6,751 தனிநபர்களின் மின்னஞ்சல் முகவரியும் தடை செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து 65 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்பிலான சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட பயணச்சீட்டுகள் மீட்கப்பட்டது. இந்தப் பயணச் சீட்டுகள் தகுதியான பயணிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.
–எம்.பிரபாகரன்