இந்திய கடற்படையின் வருடாந்திர ரீபிட் மாநாடு மற்றும் வருடாந்திர உள்கட்டமைப்பு மற்றும் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு 2022, கொச்சி தென்மண்டல கடற்படை தளத்தின் தளபதி வைஸ் அட்மிரல் எம்ஏ ஹம்பிபோலியால் மார்ச் 31-ந்தேதி தொடங்கிவைக்கப்பட்டது. அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு ஏற்ப இந்த ஆண்டு மாநாடு உள்நாட்டு தயாரிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க பொதுத்துறை-தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கவேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கடற்படை கப்பல்களை எந்தவித சவாலையும் சந்திக்கும் தயார் நிலையில் வைத்திருப்பது குறித்தும், கடற்படைக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்வது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
–திவாஹர்