தற்சார்பு இந்தியா’வை அடைவதற்கு மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பாதுகாப்பு அமைச்சகம் மூன்றாவது ஆக்கப்பூர்வமான உள்நாட்டு மயமாக்கல் பட்டியலை வெளியிடவிருக்கிறது. இதனை புதுதில்லியில் 2022 ஏப்ரல் 7 அன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார். இந்த மூன்றாவது பட்டியலில் மிகப்பெரிய சாதனங்கள் / தளங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை 2025 டிசம்பருக்குள் உள்நாட்டிலேயே உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 101 சாதனங்களின் முதலாவது பட்டியல் 2020 ஆகஸ்ட் 21-லும், 108 சாதனங்களின் இரண்டாவது பட்டியல் 2021 மே 31-லும் வெளியிடப்பட்டன. தற்போது மூன்றாவது பட்டியலின் 100-க்கும் அதிகமான சாதனங்கள் இடம் பெற்றுள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இவற்றை தயாரிக்கவும், ஆர்டர்களாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2,10,000 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும்.
–எம்.பிரபாகரன்