ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகள்!

அனைத்து ரயில் நிலையங்களிலும் பல்வேறு வசதிகளுடன் நவீனமயமாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.    ரயில் நிலையங்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

தற்போது 1253 ரயில் நிலையங்கள் ஆதர்ஷ் நிலைய திட்டத்தின்கீழ், மேம்பாட்டுக்காக  கண்டறியப்பட்டுள்ளன.  இதில் 1213 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.  எஞ்சிய  40 நிலையங்களை 2022-23 ஆம் நிதியாண்டில் மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ரயில் நிலைய மேம்பாட்டுக்கான புதிய திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மறு கட்டுமானம், முன்னேற்றம், ரயில் நிலைய கட்டிடங்களை மேம்படுத்துதல், நெரிசல் இல்லாத நுழைவு வாயில்கள் மற்றும் வெளியேறும் இடங்களை ரயில் நிலைய வளாகங்களில் அமைத்தல், பயணிகள் வருகை மற்றும் புறப்பாடு பிரிவுகளை தனித்தனியே ஏற்படுத்துதல், நெரிசல் இல்லாத போதுமான தளங்களை அமைத்தல், வாய்ப்பு இருக்கும் இடங்களில் நகரத்தின் இருபக்கங்களையும் ஒருங்கிணைத்தல், பயணிகளுக்கு ஏற்ற தகவல் பலகைகளை அமைத்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம், பயணிகளை ஏற்றி இறக்குவதற்கான வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து வசதிகள் ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். 

புதுதில்லி ரயில் நிலையம், சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம் ஆகியவை பொதுத் துறை மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் நவீன கட்டுமானம், இயக்கி மாற்றுதல் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ளன.    ராணி கமலாபதி மற்றும் காந்திநகர் ரயில் நிலையங்கள் இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.  பெங்களுரு சர் எம் விஸ்வேஸ்வரய்யா முனையம் தயாராகியுள்ளது. 

கடந்த இரு நிதியாண்டுகளில் இந்திய ரயில்வே ஒதுக்கிய தொகை மற்றும் செலவிடப்பட்ட தொகையை காணலாம்.

(ரூ.கோடியில்)

நிதியாண்டு ஒதுக்கீடு செலவு
2020-21 2615.30 2582.92
2021-2022 (till Feb, 2022) 2344.55 1566.32
2022-23 2700

மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply