பிரதமர் உழவர் நல நிதி மற்றும் வேளாண் சார்ந்த இதர திட்டங்கள் நமது நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தைக் கொடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். விவசாயிகளின் வலிமையை வலியுறுத்தியுள்ள அவர், விவசாயிகள் வலிமையாக மாறும்போது, நாடு முன்னேறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
‘நாடு நமது விவசாய சகோதர, சகோதரிகளால் பெருமை கொள்கிறது. அவர்கள் வலிமையாக இருந்தால், புதிய இந்தியா வளமானதாக இருக்கும். பிரதமர் விவசாயிகள் நல நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பல திட்டங்கள் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’.
–எஸ்.சதிஸ் சர்மா