இந்திய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன தகவல் தொடர்பு மற்றும் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து முறை இன்ட்ரான்ஸ்- II திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்முயற்சியாக இந்திய நகரங்களுக்கான நவீன தகவல் தொடர்பு மற்றும் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து முறை தொடங்கப்பட்டுள்ளது.  உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஓட்டுநர் உதவி மற்றும் எச்சரிக்கை நடைமுறை (ஓடிஏடபுள்யுஎஸ்), பேருந்து சிக்னல் முன்னுரிமை நடைமுறை, சிஓஎஸ்எம்ஐசி  ஆகிய மென்பொருள்களை கொண்டு இந்த போக்குவரத்து முறை தொடங்கப்பட்டுள்ளது.  இந்த நடைமுறை நவீனமாக்கப்பட்ட கணினி மேம்பாட்டு மையம், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் (ஐஐடி) ஆகியவை இணைந்து உருவாக்கப்பட்டது.  இந்த திட்டத்திற்கு தொழில்துறை கூட்டாளியாக மஹிந்திரா & மஹிந்திரா இருந்தது.

இந்த புதிய  போக்குவரத்து நடைமுறையை கடந்த வாரம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் ராஜேந்திர குமார் தொடங்கி வைத்தார். 

எம்.பிரபாகரன்

Leave a Reply