சுற்றுலா அமைச்சர்களின் மாநாடு ஏப்ரல் 12 மற்றும் 13 தேதிகளில் புது தில்லியில் நடைபெறுகிறது.

மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு மண்டல வளர்ச்சித்துறை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர், திருமதி. மீனாட்சி லேகி மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் திரு அஜய் பட் ஆகியோர் அமிர்த சமகத்தின் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் அமர்வுகளில் பங்கேற்கின்றனர்.

இம்மாநாட்டில் விடுதலைப் பெருவிழா கொண்டாட்டத்தின் (AKAM) முக்கிய முன்முயற்சிகள் உட்பட ‘ஒவ்வொரு வீட்டிலும் கொடி’, ‘சர்வதேச யோகா தினம்’, ‘டிஜிட்டல் மாவட்ட களஞ்சியம்’, ‘ஸ்வதந்த்ரா ஸ்வர்’ மற்றும் ‘என் கிராமம் என்பாரம்பரியம் ‘ போன்ற மக்கள் பங்கேற்பு (ஜன் பாகிதாரி) தொடர்பான நடவடிக்கைகள் குறித்த விவாதங்களும் இடம்பெறும்.

விடுதலைப் பெருவிழா கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் முதல் ஆண்டை அண்மையில் நிறைவு செய்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், 2022 -ம் ஆண்டு ஏப்ரல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், இதன் ஒருபகுதியாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சிந்திக்கவும், சிறந்த நடைமுறைகளைச் சேகரிக்கவும், அதற்கான உத்திகள் பற்றி யோசனை செய்யவும் இரண்டு நாள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. கொண்டாட்டத்தின் மீதமுள்ள காலத்திற்கு, குறிப்பாக வரவிருக்கும் முக்கிய முன்னெடுப்பு நடவடிக்கைக்கான வழிமுறைகளும் இதில் அடங்கும்.

இம்மாநாட்டை உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டு அமைச்சர் (DoNER), திரு ஜி. கிஷன் ரெட்டி தொடக்க உரையாற்றுகிறார். திரு அர்ஜுன் ராம் மேக்வால், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர், திருமதி.. மீனாட்சி லேகி, வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட் ஆகியோர் பல்வேறு விவாதங்களுக்கான அமர்வுகளில் தொடக்க உரையாற்றுகின்றனர். விடுதலைப் பெருவிழா கொண்டாட்டங்களின் வெற்றியானது “அரசின் முழுமையான” அணுகுமுறையை சார்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு அமைச்சகம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் (UT) இதற்கான பிரச்சாரத்தில் வெளிநாட்டில் உள்ள சகாக்களுடன் இணைந்து ஈடுபடுவதை உறுதி செய்கிறது. கணிசமான அளவில் கலந்து கொள்ளும் பங்குதாரர்களின் ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, மாநாட்டில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலிருந்து மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும்.

திவாஹர்

Leave a Reply