மோர்பியில் 108 அடி உயர ஹனுமான் சிலையை ஏப்ரல் 16 அன்று பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கவுள்ளார்.

ஹனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர ஹனுமான் சிலையை 2022 ஏப்ரல் 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைப்பார்.

ஹனுமன்ஜி4தாம் திட்டத்தின் ஒரு பகுதியாக,

நாடு முழுவதும் நான்கு திசைகளில் அமைக்கப்படவிருக்கும் 4 சிலைகளில் இது இரண்டாவது சிலையாகும். இது மேற்கு பக்கத்தில் மோர்பியில் உள்ள பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தத் தொடர்செயல்பாட்டின் முதலாவது சிலை வடக்குப் பகுதியில் 2010ல் சிம்லாவில் அமைக்கப்பட்டது. தெற்கே ராமேஸ்வரத்தில் சிலை நிறுவும் பணி தொடங்கியிருக்கிறது.

திவாஹர்

Leave a Reply