மத்திய அரசின் மண்டல இணைப்புத் திட்டமான உடான் திட்டத்தின் கீழ் கேஷோத்-மும்பை வழித்தடத்தில் விமான சேவைகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று (16.04.2022) தொடங்கியது. இத்திட்டத்தின் 4.1 ஏல முறையின் கீழ் அலையன்ஸ் விமான நிறுவனத்திற்கு இந்த வான் வழித்தடத்தை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடான் – மண்டல இணைப்புத் திட்டத்தின் கீழ் 417 வழித்தடங்களில் விமான சேவைகள் இயக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திரபாய் படேல், கேபினட் அமைச்சர் திரு புரேஷ் மோடி, குஜராத் மாநில சாலை மற்றும் கட்டிடம், சிவில் விமானப் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் யாத்திரைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் தேவபாய் மாலம், நாடாளுமன்ற உறுப்பினர், ரமேஷ் தாதுக், போர்பந்தர், நாடாளுமன்ற உறுப்பினர், ராஜேஷ் சுடாசமா, ஜூனாகத்-கிர் சோம்நாத், திரு ஜவஹர் சாவ்தா, சட்டமன்ற உறுப்பினர், மானவதர், திரு பாபுபாய் போக்ஹிரியா, போர்பந்தர் சட்டமன்ற உறுப்பினர், திரு ராஜீவ் பன்சால், செயலாளர், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக இணைச் செயலர், திருமதி உஷா பதீ, அலையன்ஸ் விமான நிறுவன தலைமைச் செயல் அதிகாரி திரு வினீத் சூட், மற்றும் குஜராத் மாநில அரசு அதிகாரிகள், இந்திய விமான ஆணைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விமான நிறுவனம் புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை விமான சேவைகளை இயக்கும். குறுகிய தொலைவிற்க்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஏடிஆர் 72-600, 70 இருக்கைகள் கொண்ட டர்போ ப்ராப் ரக விமானங்களை இந்த வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது. இதன் மூலம் உடான் திட்டத்தின் கீழ் கேஷோட் – மும்பை நகரங்களை இணைக்கும் முதல் விமான நிறுவனமாக அலையன்ஸ் விமான நிறுவனம் மாறும்.
இந்தநிகழ்ச்சியில் பேசிய திரு ஜோதிராதித்யா எம்.சிந்தியா, “குஜராத்தில் குறிப்பாக நமது வரலாற்றில் இடம் பெற்றுள்ள கேஷோத் நகரில் இருப்பதை நான் ஆசீர்வதித்ததாகவும், பெருமையாகவும் கருதுவதாக தெரிவித்தார். இன்று தொடங்கப்பட்டுள்ள புதிய விமான சேவை, நமது தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பிடித்த இடத்தை நாட்டின் நிதி மூலதனத் தலைநகருடன் இணைக்கும். இரண்டு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான – சோம்நாத் கோயில் மற்றும் கிர் தேசியப் பூங்கா ஆகியவை கேஷோத் நகர் அருகே அமைந்துள்ளன. புதிய வழித்தடத்தில் விமான சேவைகள் இயக்கப்படுவதால் மூலம் இந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் எளிதில் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். இவை தவிர, கேஷோடில் அமைந்துள்ள அறைக்கலன்கள், ஜவுளி, இரசாயனங்கள், சிமென்ட் போன்ற பல்வேறு தொழிற்சாலைகளும் இந்த புதிய விமான சேவையின் மூலம் பயனடையும்.
குஜராத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் வளர்ச்சித் திட்டபணிகள் குறித்துப் பேசிய அமைச்சர், “புதிய விமானசேவை தொடங்கப்படுவதுடன், கேஷோட் நகரை மாநிலத் தலைநகர் அகமதாபாத்துடன் இணைப்போம். இந்த ஆண்டு கோடை கால அட்டவணையில், அகமதாபாத் இந்தியாவின் அமிர்தசரஸ், ஆக்ரா மற்றும் ராஞ்சி. ஆகிய 3 நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது – அதேபோல், போர்பந்தர் மற்றும் ராஜ்கோட் மும்பையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஹிராசர் மற்றும் தோலேராவில் 2 புதிய பசுமை விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டு விமான நிலையங்களும், முறையே 1405 கோடி மற்றும் 1305 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள. போர்பந்தர் மற்றும் டெல்லியை இணைக்கும் சிறப்பு வழித்தடம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி தொடங்கும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.
–எஸ்.சதிஸ் சர்மா