பொதுமக்களின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய சக்தியை அளித்துள்ளது. இதற்கு, தூய்மை இந்தியா திட்டமே சிறந்த உதாரணம் என பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
கழிவறை கட்டுவதாக இருக்கட்டும் அல்லது கழிவுகளை அகற்றுவதாக இருக்கட்டும், பாரம்பரியத்தை பாதுகாப்பதாக இருக்கட்டும் அல்லது தூய்மைக்காக போட்டியிடுவதாக இருக்கட்டும், அனைத்து வகையிலும் நாடு இன்று தூய்மைத் துறையில் புதிய கதைகளை எழுதுகிறது என்று திரு மோடி கூறினார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது,
“பொதுமக்களின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு ஒரு புதிய சக்தியை அளிக்க முடியும் என்பதற்கு தூய்மை இந்தியா திட்டம் நேரடி நிருபணமாக இருக்கிறது. அது கழிவறை காட்டுவதாக இருக்கட்டும் அல்லது கழிவுகளை அகற்றுவதாக இருக்கட்டும், பாரம்பரியத்தை காப்பதாக இருக்கட்டும் அல்லது தூய்மைக்காக போட்டியிடுவதாக இருக்கட்டும், அனைத்து வகையிலும் இன்று நாடு தூய்மைத் துறையில் முன்னணியில் உள்ளது. புதிய கதைகள் எழுதப்படுகிறது”.
–எஸ்.சதிஸ் சர்மா