லக்கிம்பூர் படுகொலை வழக்கு!-மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமின் ரத்து!-உச்சநீதிமன்றம் உயிர்ப்போடுதான் இருக்கிறது!- தீர்ப்புரையின் உண்மை நகல்.

Honble-Mr..Justice.N.V. Ramana., The Chief Justice Of India.

Honble Mr Justice Surya Kant.

Hon’ble Ms. Justice Hima Kohli

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை ஏற்றியதிலும், காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதிலும் விவசாயிகள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தவுகளை வழங்க வேண்டுமென்று, சிவ் குமார் திரிபாதி, சிஎஸ் பாண்ட ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து இந்த படுகொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. “நீங்கள் யாருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளீர்கள்? அவர்களை கைது செய்தீர்களா? இல்லையா? என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து இந்தச் சம்பவத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு தொடர்பு உள்ளது என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக உத்தரப் பிரதேச சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தயாரித்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில், அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறை நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு பிப்ரவரியில் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில், நீதிபதிகள் சூர்யா காந்த், ஹீமா ஹோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை, உச்சநீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. மேலும் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அந்த தீர்ப்புரையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.

5499_2022_1_302_35135_Judgement_18-Apr-2022-1_watermarked

–Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply