ஜாம்நகரில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையத்தைப் பிரதமர் நரேந்திர மோதி நாளை தொடங்கி வைப்பார்.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலகிலேயே இந்த வகையில் முதலாவதாக பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையம் 2022 ஏப்ரல் 19 அன்று தொடங்கப்பட உள்ளது. இது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகமும், குஜராத் அரசும் ராஜ்கோட்டில் செய்தியாளர் சந்திப்புக்கு இன்று ஏற்பாடு செய்திருந்தன. இந்த மையத்தின் பூமி பூஜை நிகழ்ச்சியுடன் உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு உச்சிமாநாடும் நடத்தப்பட உள்ளது.

இந்த நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோதி, மொரீஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜூகன்நாத், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் டெட்ராஸ் கெப்ரியேசஸ் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

ஜாம்நகர் அடித்தள அமைப்பாக செயல்படும் இந்தப் புதிய மையம் உலகத்திற்கு பயன்படுவதை நோக்கமாக கொண்டது. உலகளாவிய சுகாதாரத்திற்கு பாரம்பரிய மருந்துகளின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கு ஆதாரம் மற்றும் கற்றல்; தரவுகள் மற்றும் பகுப்பாய்வு; நீடித்தத் தன்மை மற்றும் சமநிலை; புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் என்ற 4 முக்கியமான உத்திகளில் இந்த மையம் கவனம் செலுத்தும்.

உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு குறித்த உச்சிமாநாடு காந்திநகரில் ஏப்ரல் 20 முதல் 22 வரை நடைபெறும். இந்த உச்சிமாநாடு பாரம்பரிய மருந்துத் துறையில் முதலீடுகளை அதிகரிப்பதையும், புதிய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

நடைபெறஉள்ள நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு.சர்பானந்த சோனாவால், இந்தியாவின் ஆயுஷ் தொழில் துறைக்கு ஒரு மைல்கல்லாக இந்த நிகழ்வுகள் இருக்கும் என்றார். காந்தி நகரில் நடைபெற உள்ள உச்சி மாநாடு ஆயுர்வேதம் மற்றும் மூலிகை பொருட்களுக்கான உலகளாவிய சந்தையை இந்தியாவுக்கு உருவாக்கித் தரும் வாய்ப்பாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply