வேளாண்மை- கரீஃப் இயக்கம் – 2022 குறித்த தேசிய கருத்தரங்கை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.

கரீப் இயக்கம் 2022-23 க்கான வேளாண்மை குறித்த தேசிய கருத்தரங்கை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.  பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, முக்கியமான இடுபொருட்கள் விநியோகத்தை உறுதி செய்வது ஆகியவற்றுடன் மாநில அரசுகளுடன் கலந்து பேசி முந்தைய பயிர் பருவங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து கரீப் பருவத்திற்கு பயிர் வாரியான இலக்குகளை ஆய்வு செய்வது இந்த கருத்தரங்கின் நோக்கமாகும். 

இந்த கருத்தரங்கில் பேசிய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், இரண்டாவது மதிப்பீட்டின்படி, (2021-22) மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி 3,160 லட்சம் டன் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  இது முன்னெப்போதையும் விட, அதிக சாதனை அளவாகும்.  பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி முறையை 269.5 மற்றும் 371.5 லட்சம் டன்களாக இருக்கும் என்று கூறினார்.  நானோ யூரியா மூலம் யூரியா பயன்பாட்டை குறைப்பதற்கான உத்தியை வலியுறுத்திய அவர், இயற்கை வேளாண்மைக்கு அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும் என்றார். 

2022-23 ஆம் ஆண்டுக்கான மொத்த உணவு தானிய உற்பத்திக்கு 3,280 லட்சம் டன் இலக்கினையும், பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 295.5 மற்றும் 413.4 லட்சம் டன்களாக இந்த கருத்தரங்கில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் திரு மனோஜ் அஹூஜா, வேளாண் துறை ஆணையர் டாக்டர் ஏ கே சிங் உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply