சம்பா மாவட்டம் பாலியில் வரும் ஞாயிறன்று தேசம் தழுவிய “பஞ்சாயத்து ராஜ் தின” கொண்டாட்டங்களுக்காக பிரதமர் நரேந்திர மோதி ஜம்மு செல்லவிருக்கிறார்.

சம்பா மாவட்டம் பாலியில் வரும் ஞாயிறன்று தேசம் தழுவிய “பஞ்சாயத்து ராஜ் தின” கொண்டாட்டங்களுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு செல்லவிருக்கிறார். ஜம்முவில் இன்று செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த நிகழ்ச்சியில் மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில் பத்துக்கும் அதிகமான அரங்குகள் கண்காட்சி இடம் பெறும் என்றார். இந்தக் கண்காட்சி புதிய தொழில்களுக்கு ஊக்கமளிப்பதோடு நாடு முழுவதும் கிடைக்கக்கூடிய வாழ்வாதாரத்திற்கான புதிய வழிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உதவும் என்று அவர் கூறினார்.

சம்பா மாவட்டத்தில் 6,408 சதுர மீட்டர் பரப்பில் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத சூரிய மின் உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பணி சாதனை காலமான 18 நாட்களில் நிறைவடைந்துது. பாலி பஞ்சாய்த்தில் தூய்மையான மின்சாரத்தை இது விநியோகிப்பதோடு 340 வீடுகளுக்கு விளக்கொளியைத் தரும்.

வறுமை மற்றும் விரிவுப்படுத்தப்பட்ட கிராமப்புற வாழ்வாதாரம், ஆரோக்கியமான கிராமம், குழந்தைகளுக்கு உகந்த கிராமம், போதிய தண்ணீர் உள்ள கிராமம் தூய்மையான பசுமை கிராமம். தற்சார்பு அடிப்படைக் கட்டமைப்புள்ள கிராமம் போன்ற மையப் பொருள்கள் அடிப்படையில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜூடன் ஒருங்கிணைக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டிருப்பது சமானிய மக்களுக்கு பயன் தரும் என்று அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

திவாஹர்

Leave a Reply