சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் ஏப்ரல் 25 அன்று “யோக் பிரபா” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

புதுதில்லியில் உள்ள சஃப்தர்ஜங் விமான நிலையத்தில் 2022 ஏப்ரல் 25 அன்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் “யோக் பிரபா”  நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.  இந்த நிகழ்வுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம் சிந்தியாவும், இணை அமைச்சர் வி கே சிங்கும் தலைமை வகித்து தொடங்கிவைப்பார்கள்.  இந்த மாபெரும் நிகழ்வில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், அதனுடன் இணைந்த அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான அலுவலர்கள் பங்கேற்பார்கள்.

2022 ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடுவதற்கு ஏறத்தாழ ஒரு மாதம் உள்ள நிலையில், இந்த நிகழ்வு அன்றாட வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவம் பற்றிய  விழிப்புணர்வை உருவாக்க உதவும்.

திவாஹர்

Leave a Reply