மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாஷிங்டனில் நடைபெற்ற 105-வது வளர்ச்சிக்குழுவின் தொடக்கக் கூட்டத்தில் பங்கேற்றார். டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் வளர்ச்சி, உக்ரைன் போரினால் உலகளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து உலக வங்கிக்குழுவின் கருத்து உள்ளிட்டவை தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய மத்திய நிதி அமைச்சர், நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விரைவடைந்து வருவதாகவும், மற்ற பெரிய பொருளாதார நாடுகளைவிட அதிகரித்து வருவதாகவும் கூறினார். கொவிட் தொற்று பாதிப்பை சிறந்த முறையில் இந்தியா எதிர்கொண்டதாகவும் இதுவரை 1.85 பில்லியன் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
–எம்.பிரபாகரன்